இலங்கை தமிழினப்படுகொலையைக் கண்டித்து ஏழாவது நபர் தீக்குளித்து மரணம்
எமது இழப்புக்களை உங்கள் அரசியலாக்காதீர்கள்.
குரல் கொடுத்தீர் மறுக்கவில்லை.
அரசியலாக்காதீர்.
எனது உடலில் எனது உணர்வில் தினம் தினம் இனவெறியரசு செய்திகளாக பாச்சும் வதைகளை எனது சொந்தங்களில் சிங்களவன் பாச்சிய தழும்புகளையும் எம்மீது
வெள்ளையன் பாச்சிக்கொண்டிருக்கும் தழும்புகளையும் ஐPரணிக்க வலுவின்றி அதற்குள்ளும் நமது பிள்ளைகளுக்காக நம்மை எல்லாம் அர்பணித்து கொள்கிறோமே எதற்காக நம்மை நாமே தயார்படுத்திக்கொள்ளத்தான்.எனக்கொன்றொரு நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை தான்.
நமக்கு வேண்டாம் இந்ததீக்குழிப்பு மரணங்கள். உணர்வு போதும். உணர்ச்சி வேண்டாம். உணர்ச்சி அப்பப்போ வரும் போகும். உணர்வு அப்படியல்ல . எப்போதும் ஒன்று தான்.அதை யாராலும் அழித்துவிட முடியாது.தீக்குழித்து எமது விடுதலைப்போராட்டத்தை அரசியலாக்காதீர்.தயவு செய்து வேண்டாம்.
எமது போராட்டமென்ன உங்கள் அரசியலா? யாலியா விழையாடிப்பாக்க. நோhhhhh வேண்டாம். எமது போராட்டம் உணர்வோடு உயிரோடு தொப்புள் கொடி உறவோடு தொடர்புடையது. தயவு செய்து விட்டு விடுங்கள்.
சரி நீங்கள் செய்வது அனைத்தும் சரி என்றால் உங்களது போராட்டங்களால் ஒரு தீர்வு வரும் என்றால் ... இது சாத்தியமென்று என்னை நம்பச்சொல்கிறீர்களா? ஒரு நாளுமில்லை.
சரி உங்கள் பக்கமே வருகிறேன். இவ்வளவு நாளும் எங்கே போனீர்கள்.?? ஓ பழையது எதற்கா. ? சரி வேண்டாம். பேசவே இல்லை.
இத்தனை நாளாக உங்களால் என்னத்தை சாதிக்க முடிஞ்சுது. உங்களைப்பற்றிய செய்தி தான். ஏதாவது எம்மக்களுக்கான நன்மைச்செய்தி எதுவுமே இல்லை.ஏன் கனக்க நம்மக்கள் படும் அவலம்... எதுவுமே இல்லை. உங்களது விபரங்களையும் உங்களது புகைப்படங்களையும் போடும் பத்திரிகைகள் எமது மக்கள் படும் அவலங்களை ஏன் இன்னமும் தலைப்புச்செய்திகளாக போடவில்லை. தயவு செய்து நமது போராட்டத்தை உங்களது அரசியலாக்காதீர்கள். உங்களால் ஒன்றுமே செய்யமுடியாது அது மட்டும் எனக்கு தெரியும்.
அதற்காக நமது உணர்வுகளையும் நமது உயிர்த்தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் முகமாக தீக்குழிப்பதை நிறுத்தங்கள். உண்மையான ஒரு வீரன் இப்படி செய்யமாட்டான். இருக்கும் பிரச்சனைகளில் இருந்த தப்பித்துக்கொள்வோரே அதாவது பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாதவாறு தவிப்போரே இத்தகைய தற்கொலை முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்துவர். இது எந்தவகையில் சாத்தியம்.இது முட்டாள்தனமாக தெரியவில்லை.
நீங்கள் உங்கள் அரசியலில் இருக்கும் தீர்வுகாணப்படமுடியாத பல பிரச்சனைகளுக்கு நம்மையும் நமது போராட்ட உண்ர்வுகளையும் எமது உயிர்த்தியாகங்களையும் பகடைக்காய்களாக பயன்படுத்துகிறீர்கள் அது தான் உண்மை.
சின்ன வயதில் பார்த்த செய்திகள். தீக்குழிப்பு தீக்குழிப்பு. எல்லாமே இந்திய அரசியலுக்காக.நான் இந்தியா போன போது இது பற்றி பேசிய போது ஓ... அரசியல் வாதிங்க இப்படி செய்ய சொல்லுவாங்க குடும்பத்தையே பாக்கிறன் என்பாங்க. இந்த பசங்களும் செய்திடுவாங்க. என்றாங்க. எனக்கு ஏற்பட்ட அந்தஉணர்வை எழுதமுடியாது.
அடுத்தடுத்து வரும் தீக்குழிப்பு அதைத்தான் உணர்த்துகிறதோ என எண்ணத்தோன்றுகிறது.
ஈழத்தமிழர்க்கெல்லாம் ஒரு உயிரிழப்பே பெருந்துயரை தருகிறபோது எப்படி தீக்குழிப்பை பாராட்டியும் போற்றியும் புகழ்ந்தும் பாடமுடிகிறது இந்நிய அரசியல் வாதிகளால். நம்பமுடியவில்லை.இந்த தீக்குழிப்பில் ஈடுபட விரும்புபவர்கள் தாரளமாக அண்ணன் பிரபாகரனோடு தம்மை இணைத்தக்கொள்ளலாமே.ஏன் இத்தனை அவ மரணங்கள்.???
வாருங்கள் சேர்ந்தே போராடலாம். யார் வேண்டாம் என்றது.
மேடையும் ஒலிபெருக்கியும் மேடைமுன் முட்டாள் மக்கள் சனத்திரளும் சேர்ந்து விட்டால் என்னவும் செய்து விடலாம் என்னவும் பேசலாம் என்ற நம்பிக்கையோ. அவையாவுமே அவநம்பிக்கையே.போதும் இந்திய மக்களைத்தான் ஏமாத்தினீர்கள். ஈழத்துமக்களை உங்களால் ஏமாத்த முடியாது.
எமது
போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவோர் தாராளமாக ஈழத்திற்கு சென்றே இறங்கலாம். ஈழவிடுதலைப்போராட்டம் உங்களை அணைக்கும்.உங்கள் உயிரை வீணே பலியிடாதீர் இந்த இந்திய அரசியல் வாதிகளுக்காக ......
நளாயினி
Thursday, February 26, 2009
Wednesday, February 25, 2009
Monday, December 08, 2008
உயிர்த்தீ......( 23------30)

*
மெதுவாகத்தான்
என் இதயம் திறந்துஉட்புகுந்தாய்.
ஆனால் இத்தனை
அதிர்வுகளை எனக்குள்
தருவாய் என
நான் அப்போ
நினைக்க வில்லை.
இது பற்றி உன்னோடு
கதைக்காமல் நான்
வேறு யாரோடு கதைப்பது.
நீ தானே என் நண்பனாச்சே.
*
எந்தப்பாதம் வைத்து
என் இதயத்துள்
புகுந்தாய்.!
அத்தனை உறுதியான
வருகை.
அது தான் கேட்டேன்.
*
கண் மூடி
துயிலுவோம்
என்றால்
அதென்னது
சிரிப்பு!
என் விழிகளைத் திறந்து.
*
இதயம் விட்டு விட்டு
துடிப்பதாக
எல்லாம் பொய்.
எமது சிரிப்பொலி அல்லவா
கேட்கிறது.
*
உன் அங்கவஸ்திரம்
கொண்டு என் உயிர்
பறித்தவனே!!
வாத்தியக்கருவி
ஒன்றை கண்டெடுத்தேன்.
அடடே!!
பார்த்துக் கொண்டிருக்கவே
எனக்குள் எத்தனை நாதம்.
*
எத்தனையோ செடி
வளர்க்கிறேன் வீட்டில்
தினமும் நீர் ஊற்றி
பசளை இட்டு
சூரிய ஒளிபட வைத்து.
அதெப்படி
சூரிய ஒளியில்
பச்சையமே தயாரியாது
என்னுள் இத்தனை
பசுமையாக வளர முடிகிறது
உன்னால்!
*
இதயத்துள்
சொல்லாமல்
கொள்ளாமல்
புகுந்து விட்டு
இத்தனை கலாட்டாவா?!!
குட்டிவிட்டனெண்டா.
*
மெல்லிய புன்னகையால்
தான் என்னை கவர்ந்தாய்.
இத்தனை வெரி சீரியஸ்சாக
சிந்திக்க வைத்து விட்டாயே.
Labels:
உயிர்த்தீ...... (23---30)
Thursday, September 11, 2008
உயிர்த்தீ...... (18------22)

*
வாழ்க்கை அது
எத்தனை இன்பமானது!!
தெரியும் எனக்கும்.
ஆனாலும்
சுயநல கூடுகளுக்குள்
தெரியாமல்
மாட்டுப்பட்ட
அனுபவங்கள் தான்
எனக்கு அதிகம்.
*
கவிதையின்
தலைப்புக்கள்
பிடித்ததால்
படிக்க தொடங்கினேன்.
வரிவரியாய் பல
முனகல் சத்தங்கள்.
அத்தனை கவிதைக்குள்ளும்
ஒத்தடம் தேடும்மனசு
*
இந்த பூவுக்குள்ளும்
அழகியதான
ஒரு சின்ன மனசு
எத்தனை ஏக்கங்களை
சுமந்து இருக்கிறது என
எத்தனை பேருக்கு தெரியும்.
*
உயிரே சுவாலையாகி
எரிந்து நான் சாம்பராகும் முன்
உன்னைக் கண்டேன்.
அத்தனை வேகமாய்
எப்படி உன்னால்
அத்தீயை
நட்புடன் அன்பு கலந்து
அணைக்க முடிந்தது.
அன்பு வார்த்தைக்காய்
எத்தனை நாள் அழுதிருப்பேன்.
இந்த வார்த்தை போதாதென்று
நீயே தினம் அருகில் வேண்டும் என்றால்
என்ன மனசிது.!!
*
என் சுய நினைவை
இழக்க செய்தவனே!
படர்ந்திடு இனி என் மீது
நட்புக் கொடியாக.
Labels:
உயிர்த்தீ......
Tuesday, September 09, 2008
உள்ளேன் சகோதரர்களே. விடுமுறை முடித்து சந்தோசமாக சுவிஸ் வந்து சேர்ந்தோம். எப்படித்தான் இரண்டு மாதங்கள் பறந்தனவென்றே தெரியவில்லை. எல்லோரும் நலம் தானே.
Sunday, June 15, 2008
பூக்கள் பேசிக்கொண்டால்.... ! (11)

*
உனக்கான
கோபம் என்கானது தானே.
அந்த கோபங்களால் கூட
நான் மகிழ்ந்து தான் போகிறேன்.
*
எத்தனை கேள்விகளை
உன் முன்னே பரப்பியபடி.
அத்தனை கேள்விகளும்
மௌனமாய் நீ
காரணம் என்னவோ?
உனக்கும் அவை
பூர்த்தி செய்யப்படாத
கேள்விகள் என்றாவது
சொல்லித்தெலையேன்.
உனக்கு திமிர் அதிகம்
இல்லை என்றால்
சொல்லி இருப்பாயே.
*
உனது ஈகோவை விட்டிறங்கு.
அது தான்
நமது வாழ்க்கைக்கு நல்லது.
*
உனது பார்வையால் மட்டுமே
நான் மலர்ந்து கொள்கிறேனே.
அதெப்படி...!
*
உனது பார்வையில்தான்
எத்தனை சூரியர்கள்.
எனக்கு மட்டுமே தெரிந்த
புதிற்கான விடை இது.
*
மொட்டு பூப்பது இயல்பு .
எனக்கான மகரந்தங்களை
எடுத்து வந்தவன் நீ.
*
விழி திறந்து
மொழி பகர்ந்து
மௌனமொழி பேசி
ஆகா அற்புதமொழிகள் .
எம்மைப்போல் யாரும்
இவ்மொழிகள் உணர்ந்திரார்.
*
முத்தம் ஒன்று தந்தாய்
அதன் ஈரப்பதன்
அழியாமல் இன்றுரை.
நளாயினி.
பூக்கள் இன்னும் பேசும்.....
Labels:
பூக்கள் பேசிக்கொண்டால்....
Sunday, May 25, 2008
Subscribe to:
Posts (Atom)










